பெங்களூரு
சிந்தாமணியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் நகை, பணம் திருட்டு
பெங்களூரு

சிந்தாமணியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் நகை, பணம் திருட்டு

தினத்தந்தி
|
16 Oct 2023 6:45 PM GMT

சிந்தாமணியில் வீட்டின் பூட்டை உடைத்து ரூ.1½ லட்சம் மதிப்பிலான நகை, பணத்தை மர்மநபர்கள் திருடிச் சென்றுள்ளனா்.

கோலார் தங்கவயல்

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி தாலுகா பெரிய மாச்சனஹள்ளி கிராமத்தைச் சேர்ந்தவர் ஜானகி அம்மாள். இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் வெளியூருக்கு சென்றார். நேற்று காலையில் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவின் பூட்டு உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டுக்குள் சென்று பார்த்தார். அப்போது வீட்டில் பொருட்கள் சிதறிக்கிடந்தன. அனைத்து அறைகளின் கதவுகளும் திறந்து கிடந்தது. பீரோ உடைக்கப்பட்டு கதவு திறந்து கிடந்தது.

அதில் இருந்த நகைகள், பணம், வெள்ளி பொருட்களை காணவில்லை. யாரோ மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்து நகைகள் மற்றும் பணத்தை திருடிச்சென்றுவிட்டது ஜானகி அம்மாளுக்கு தெரியவந்தது. திருட்டுப்போன நகைகள் மற்றும் பணத்தின் மொத்த மதிப்பு ரூ.1.42 லட்சம் இருக்கும் என்று கூறப்படுகிறது.

இதுபற்றி ஜானகி அம்மாள், சிந்தாமணி புறநகர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். மேலும் மர்ம நபர்களையும் வலைவீசி தேடிவருகிறார்கள். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்