< Back
பெங்களூரு
பெங்களூரு
மாற்றுத்திறனாளி இளம்பெண் கற்பழிப்பு; தொழிலாளி கைது
|1 Jun 2022 9:14 PM IST
ஹாவேரியில் மாற்றுத்திறனாளி இளம்பெண்னை கற்பழித்ததாக தொழிலாளி ஒருவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
ஹாவேரி:
ஹாவேரி மாவட்டம் ஹனகல் தாலுகா திலவள்ளி கிராமத்தில் 18 வயது இளம்பெண் ஒருவர் வசித்து வருகிறார். அந்த பெண் மாற்றுத்திறனாளி ஆவார். நேற்று மாலையில் இந்த இளம்பெண் வீட்டில் தனியாக இருந்தார். அப்போது அதே கிராமத்தைச் சேர்ந்த கூலி தொழிலாளியான பரசுராம் மடிவாலா மற்றும் யஷ்வந்த் ஆகியோர் அங்கு வந்தனர். அவர்கள் அதிரடியாக அந்த இளம்பெண்ணின் வீட்டிற்குள் புகுந்தனர்.
பின்னர் அவர்கள் அந்த இளம்பெண்ணை தாக்கி வாயில் துணியை திணித்தனர். பின்னர் இருவரும் சேர்ந்து அந்த இளம்பெண்ணை கற்பழித்துவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதுபற்றி அந்த பெண் தனது பெற்றோரிடம் கூறினாள். அவர்கள் இதுபற்றி ஆடூர் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவாக இருந்த பரசுராமை கைது செய்தனர். மேலும் யஷ்வந்த்தை போலீசார் வலைவீசி தேடிவருகிறார்கள்.