< Back
பெங்களூரு
நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை பாராட்டிய ரஜினிகாந்த்
பெங்களூரு

நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை பாராட்டிய ரஜினிகாந்த்

தினத்தந்தி
|
22 Jun 2022 3:23 PM GMT

'சார்லி 777' என்ற திரைப்படத்தில் நடித்தவர் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி. இவரை ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார்.

பெங்களூரு:

கன்னட திரைஉலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் ரக்‌ஷித் ஷெட்டி. இவர் நடித்த 'சார்லி 777' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி திரையில் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. அந்த படத்தில் ஒரு மனிதனுக்கும், நாய்க்கும் இருக்கும் பாசப்பிணைப்பை அழகாக காட்சிப்படுத்தி இருப்பதாக கூறி பலரும் பாராட்டி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்தில் அந்த திரைப்படத்தை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை பார்த்துவிட்டு தான் வளர்த்த நாயை நினைத்து கண் கலங்கினார்.

இந்த நிலையில் இப்படத்தை பிரபல நடிகர் ரஜினிகாந்த் பார்த்துள்ளார். பின்னர் அவர் உடனடியாக செல்போன் மூலம் நடிகர் ரக்‌ஷித் ஷெட்டியை தொடர்பு கொண்டு படம் நன்றாக இருப்பதாக கூறி ரக்‌ஷித் ஷெட்டியின் நடிப்பையும் பாராட்டி உள்ளார். நடிகர் ரஜினிகாந்த் தனக்கு போன் செய்து பாராட்டியது தன் வாழ்நாளில் கிடைத்த மிகப்பெரிய கவுரவம் என்று நடிகர் ரக்‌ஷித் ஷெட்டி கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்