< Back
பெங்களூரு
மண்டியாவில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்
பெங்களூரு

மண்டியாவில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம்

தினத்தந்தி
|
22 Oct 2023 2:32 AM IST

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

மண்டியா:

தமிழகத்துக்கு தண்ணீர் திறப்பதை கண்டித்து மண்டியாவில் கல்லூரி மாணவ-மாணவிகள் போராட்டம் நடத்தினர்.

தண்ணீர் திறப்பு

காவிரி மேலாண்மை ஆணையம் உத்தரவின்பேரில் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து கர்நாடகத்தில் விவசாயிகள், கன்னட அமைப்பினா் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். குறிப்பாக காவிரி நதியின் மையப்பகுதியான மண்டியா மற்றும் மைசூரு மாவட்டங்களில் விவசாயிகள் தீவிர போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு 15 நாட்களுக்கு வினாடிக்கு 3 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடக அரசுக்கு காவிரி ஒழுங்காற்று குழு உத்தரவிட்டது. அதன்படி தண்ணீர் திறக்கப்பட்டு வருகிறது. இது கர்நாடக விவசாயிகள் மத்தியில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது.

மாணவர்கள் போராட்டம்

இந்த நிலையில் மண்டியா டவுனில் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு உள்ள சர் எம்.விசுவேஸ்வரய்யா பூங்காவில் காவிரி நீர் பாதுகாப்பு குழுவினர் 40 நாட்களுக்கு மேலாக உள்ளிருப்பு போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்களுக்கு ஆதரவாக தினமும் பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று மண்டியா அரசு கலை கல்லூரியை சேர்ந்த மாணவ-மாணவிகள் வகுப்புகளை புறக்கணித்துவிட்டு சர் எம்.விசுவேஸ்வரய்யா பூங்காவில் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் காவிரி நீர் பாதுகாப்பு குழுவினருக்கு ஆதரவாக போராட்டம் நடத்தினர்.

அப்போது அவர்கள் மத்திய, மாநில அரசுகளுக்கு எதிராக கோஷம் எழுப்பினார்கள்.

மேலும் செய்திகள்