பிரதாப் சிம்ஹா எம்.பி. பேச்சுக்கு தலித் அமைப்பினர் கண்டனம்
|மகிஷா தசரா குறித்து பிரதாப் சிம்ஹா எம்.பி. பேச்சுக்கு தலித் அமைப்பினர் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
மைசூரு
மகிஷா தசரா
மைசூரு-குடகு தொகுதி எம்.பி. பிரதாப் சிம்ஹா கடந்த சில நாட்களுக்கு முன்பு சாமுண்டி மலையில் மகிஷா தசரா நடத்த அனுமதி அளிக்ககூடாது என பேசினார். தசரா நடைபெறும் அந்தநாளில் சாமுண்டி அடிவாரத்தில் இருந்து இந்து அமைப்பினர் ஊர்வலம் நடத்த திட்டமிட்டுள்ளனர் எனவும் கூறி இருந்தார். இந்த பேச்சுக்கு தலித் அமைப்பினர் கண்டனம் ெதரிவித்து வருகிறார்கள்.
இந்தநிலையில், மைசூரு மாவட்ட தலித் அமைப்பினர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தனர். அப்போது அவர்கள் கூறுகையில், கர்நாடகத்தில் பா.ஜனதா கட்சியில் தலித் மக்கள் ஏராளமானோர் இருந்து வருகிறார்கள். அவர்கள் வாக்கு பா.ஜனதா கட்சிக்கு முக்கியமான உள்ளது.
மகிஷா தசரா விழாவை தலித் அமைப்பினர் ஆண்டுதோறும் கொண்டாடி வருகிறார்கள். இந்்தநிலையில், சாமுண்டி மலையில் மகிஷா தசரா விழா கொண்டாடுவது குறித்து பிரதாப் சிம்ஹா எம்.பி. அவதூறாக பேசி உள்ளார்.
வன்முறை தூண்டும்
அவரது பேச்சு வன்முறையை தூண்டும் வகையில் உள்ளது. எனவே இதுகுறித்து பேசுவதை பிரதாப் சிம்ஹா எம்.பி. நிறுத்தி கொள்ள வேண்டும். இந்த சம்பவம் குறித்து இதுவரை பா.ஜனதா தலைவர்கள் யாரும் பேசவில்லை. அவர் பேசியது தலித் சமூகத்தை அவமதிக்கும் செயலாகும், என்றனர்.
இதேப்போல் மைசூரு நகர பா.ஜனதா எஸ்.சி. பிரிவு தலைவர் வி.கிரிதர் கூறுகையில், மகிஷா தசரா விழா குறித்து பிரதாப் சிம்ஹா எம்.பி. பேசியது வருந்தக்தக்க செயல். ஒரு நபரை பற்றி பேசும்போது அவரை அவமதிக்கும் வகையில் பேசக்கூடாது.
மேலும் யார் மனதையும் புண்படும் வகையிலும் பேசக்கூடாது. அவர் எந்த கட்சியில் இருந்தாலும் சரி, என்றார்.