< Back
பெங்களூரு
பெங்களூரு
'ஹனிடிராப்' முறையில் பணம் பறிக்க முயன்ற பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்த 13 பேர் கைது
|17 Oct 2023 3:13 AM IST
ஹனி டிராப் முறையில் பணம் பறிக்க முயன்ற பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்த சம்பவம் நடந்துள்ளது.
ெபலகாவி:
பெலகாவி மாவட்டம் கட்டபிரபா போலீஸ் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் அரசு அதிகாரியை ஹனிடிராப் முறையில் மிரட்டி பணம் பறிக்க ஒரு பெண் முயன்றார். இதையடுத்து, அந்த பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்து கிராமத்தில் ஊர்வலமாக சிலர் அழைத்து சென்றனர். இந்த சம்பவம் பெலகாவியில் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதையடுத்து, கட்டபிரபா போலீஸ் நிலையத்தில் 20 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்தது.
இந்த நிலையில், பெண்ணுக்கு செருப்பு மாலை அணிவித்த விவகாரத்தில் தலைமறைவாக இருந்த 13 பேரை போலீசார் கைது செய்தனர். மேலும் சிலரை போலீசார் வலைவீசி தேடி வருகிறார்கள்.
இந்த விவகாரத்தில் கைதானவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று பெலகாவி போலீஸ் சூப்பிரண்டு பீமாசங்கர் குலேத் தெரிவித்துள்ளார்.