மைசூரு தசரா இன்றைய நிகழ்ச்சிகள்
|மைசூரு தசரா விழா கடந்த 15-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தசரா விழாவின் 6-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம்
மைசூரு தசரா விழா கடந்த 15-ந் தேதி தொடங்கி கோலாகலமாக நடைபெற்று வருகிறது. இந்த விழாவையொட்டி பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்தநிலையில் தசரா விழாவின் 6-வது நாளான இன்று (வெள்ளிக்கிழமை) நடைபெறும் நிகழ்ச்சிகளின் விவரம் வருமாறு:-
* காலை 7 மணிக்கு டவுன்ஹால் வளாகத்தில் மைசூரு பாரம்பரிய உடை அணிந்து தம்பதியினர் குதிரை வண்டியில் சவாரி செய்யும் நிகழ்ச்சி நடக்கிறது. இந்த நிகழ்ச்சியை சட்டத்துறை மந்திரி எச்.கே. பட்டீல் தொடங்கி வைக்கிறார்.
* காலை 7.30 மணிக்கு மாவட்ட சிறையில் கைதிகளுக்கு சிறப்பு யோகா பயிற்சி நடக்கிறது. இதனை தன்வீர்சேட் எம்.எல்.ஏ. தொடங்கி வைக்கிறார்.
* காலை 9.30 மணிக்கு கோட்டை ஆஞ்சநேயர் கோவில் வளாகத்தில் விவசாயிகள் தசரா விழாவையொட்டி மாட்டு வண்டி போட்டி நடக்கிறது. இந்த போட்டியை விவசாயத்துறை மந்திரி செலுவராயசாமி தொடங்கி வைக்கிறார்.
* காலை 11 மணிக்கு மைசூரு ெரயில் நிலையம் அருகில் இருக்கும் ஜே.கே. கிரவுண்ட் மைதானத்தில் விவசாயிகளுக்கான கண்காட்சி, விளையாட்டு நிகழ்ச்சிகள் நடக்கிறது.
* காலை 11.30 மணிக்கு ஜே.கே. மைதானத்தில் மருத்துவ கல்லூரி அசோசியேசன் சார்பில் விவசாய தசரா மேடை நிகழ்ச்சி, விவசாயிகளுக்கு பாராட்டுதல் நிகழ்ச்சி நடக்கிறது.
* மாலை 6 மணிக்கு அரண்மனை வளாகத்தில் ராக பாடல்கள், கலாசார நிகழ்ச்சி நடக்கிறது.
* இரவு 7 மணிக்கு பெங்களூருவை சேர்ந்த வீணை வித்வான் ரேகா சுப்ரமணியத்தின் வீணை வாசிப்பு நிகழ்ச்சி நடக்கிறது.
* இரவு 7.30 மணிக்கு மேற்கு வங்காளத்தை சேர்ந்த சோபி போஸ் திருவேணியின் குச்சிப்புடி பரதநாட்டியம் நடக்கிறது.
மைசூரு டவுன்ஹால், ஜெகன்மோகன் அரண்மனை, சாமுண்டி மலை கோவில் வளாகம், நஞ்சன்கூடு நஞ்சுண்டேஸ்வரர் கோவில் உள்ளிட்ட இடங்களில் மாலை 6 மணிக்கு மேல் இசை பாட்டு கச்சேரி நடைபெற உள்ளது.
இதை தவிர அரண்மனையில் வழக்கம்போல் காலை, மாலை நேரங்களில் சிறப்பு பூஜைகள், மன்னரின் தனியார் தர்பார் நிகழ்ச்சி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடக்கிறது.