< Back
பெங்களூரு
கவுரி லங்கேஷ் கொலை: சாட்சியங்கள் பட்டியலை பெங்களூரு கோர்ட்டில் தாக்கல்
பெங்களூரு

கவுரி லங்கேஷ் கொலை: சாட்சியங்கள் பட்டியலை பெங்களூரு கோர்ட்டில் தாக்கல்

தினத்தந்தி
|
5 Jun 2022 10:20 PM IST

பெண் பத்திரிக்கையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பான சாட்சி பட்டியலை பெங்களூரு கோர்ட்டில் அரசு வக்கீல் சமர்பித்துள்ளார்.

பெங்களூரு:

பெங்களூரு ஆர்.ஆர்.நகர் பகுதியில் வசித்து வந்தவர் கவுரி லங்கேஷ். பெண் பத்திரிகையாளரான இவரை, கடந்த 2017-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5-ந் தேதி மர்மநபர்கள் துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தனர். இந்த கொலை குறித்து சிறப்பு விசாரணை குழு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் 17 பேரை போலீசார் கைது செய்து உள்ளனர். கைதானவர்கள் மீது போலீசார் கோர்ட்டில் குற்றப்பத்திரிகையும் தாக்கல் செய்து இருந்தனர். ஆனால் பல்வேறு காரணங்களால் இந்த வழக்கு விசாரணை நடக்காமல் இருந்து வந்தது. இதையடுத்து கவுரி லங்கேஷ் கொலை வழக்கு விசாரணை பெங்களூரு செசன்சு கோர்ட்டில் உள்ள கர்நாடக குற்ற தடுப்பு சிறப்பு கோர்ட்டில் கடந்த மாதம் (மே) 28-ந் தேதி தொடங்கியது.

நேற்று இந்த வழக்கின் விசாரணை நடந்த போது கவுரி லங்கேஷ் கொலை வழக்கின் சாட்சியங்கள் பட்டியலை நேற்று முன்தினம் கோர்ட்டில் அரசு வக்கீல் சமர்ப்பித்தார். அப்போது இந்த பட்டியல் மீது ஆட்சேபனை இருந்தால் 6-ந் தேதிக்குள் (இன்று) தெரிவிக்க வேண்டும் என்று கூறி கோர்ட்டு விசாரணையை தள்ளிவைத்தது.

மேலும் செய்திகள்