< Back
பெங்களூரு
பெங்களூரு
வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதல்: கல்லூரி மாணவர் பலி
|16 Jun 2022 8:35 PM IST
பெங்களூருவில் வாகனம் மீது மோட்டார் சைக்கிள் மோதியதில் கல்லூரி மாணவர் பலியானார்.
பெங்களூரு:
பெங்களூரு நாகசந்திரா பகுதியை சேர்ந்தவர் சோமசேகர் (வயது 22). இவர் கல்லூரி ஒன்றில் பி.காம் படித்து வந்தார். நேற்று முன்தினம் நள்ளிரவு அவர் வெளியே சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டார். அப்போது அவர், உல்லால் அருகே நைஸ் ரோட்டில் நள்ளிரவு 11.45 மணியளவில் வந்தபோது, முன்னால் சென்ற வாகனத்தின் மீது சோமசேகரின் மோட்டார் சைக்கிள் மோதியது.
இதனால் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த சோமசேகர் தலையில் பலத்த காயம் அடைந்து இறந்துவிட்டார். இதுகுறித்து காமாட்சிபாளையா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.