< Back
பெங்களூரு
மாரிகுப்பம்-பெங்களூரு மெமு ரெயில் வழக்கம்போல் இயங்கும்
பெங்களூரு

மாரிகுப்பம்-பெங்களூரு 'மெமு' ரெயில் வழக்கம்போல் இயங்கும்

தினத்தந்தி
|
30 May 2022 9:46 PM IST

ரத்து செய்யப்பட்டிருந்த மாரிகுப்பம்-பெங்களூரு ‘மெமு’ ரெயில் வழக்கம்போல் இயங்கும் என்று தென்மேற்கு ரெயில் அறிவித்துள்ளது.

பெங்களூரு:

தென்மேற்கு ரெயில்வே வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

ஒயிட்பீல்டு-தேவன்கொந்தி ரெயில் நிலையங்களுக்கு இடையே பராமரிப்பு பணிகள் நடந்து வருவதால் மாரிகுப்பம்-கே.எஸ்.ஆர். பெங்களூரு மெமு ரெயில் (01776), பங்காருபேட்டை-மாரிகுப்பம் மெமு ரெயில் (01777) 31-ந் தேதி (இன்று), 1-ந் தேதி (நாளை) 2, 4, 6, 7, 8-ந் தேதிகளில் இயங்காது என்று கூறப்பட்டு இருந்தது.

ஆனால் இந்த மெமு ரெயில்கள் மேற்கண்ட தேதிகளில் வழக்கம்போல் இயங்கும். இதுபோல எம்.ஜி.ஆர். சென்னை சென்டிரல்-மைசூரு சதாப்தி எக்ஸ்பிரஸ் (12007) இன்று (செவ்வாய்க்கிழமை) 2, 4, 6, 7-ந் தேதிகளில் ரத்து செய்யப்பட்டு இருந்தது. ஆனால் மேற்கண்ட தேதிகளில் இந்த ரெயில் வழக்கம்போல் இயங்கும்.

இவ்வாறு தென்மேற்கு ரெயில்வே கூறியுள்ளது.

மேலும் செய்திகள்