< Back
பெங்களூரு
மடிகேரி; போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது
பெங்களூரு

மடிகேரி; போதைப்பொருள் விற்ற 2 பேர் கைது

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

மடிகேரியில் போதைப்பொருள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

குடகு-

குடகு மாவட்டம் மடிகேரி டவுனில் 2 பேர் போதைப்பொருள் விற்பனை செய்வதாக போலீஸ் சூப்பிரண்டு ராமராஜனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து அவரது உத்தரவின்பேரில் மடிகேரி போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று அதிரடி சோதனை நடத்தினர்.

அப்போது அந்தப்பகுதியில் போதைப்பொருள் விற்பனை செய்து கொண்டிருந்த 2 பேரை பிடித்து போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 20 கிராம் எம்.டி.எம்.ஏ. போதைப்பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

விசாரணையில் அவர்கள் கேரள மாநிலம் காசர்கோட்டை சேர்ந்த அமீர் (வயது 28), முகமது ஷபீர் (30) என்பதும், அவர்கள் கேரளாவில் இருந்து எம்.டி.எம்.ஏ. போதைப்பொருளை காரில் கடத்தி வந்து விற்பனை செய்ததும் தெரியவந்தது.

இதையடுத்து காரையும் போலீசார் பறிமுதல் செய்தனர். இதுகுறித்து மடிகேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்