< Back
பெங்களூரு
கர்நாடகத்தில் தகுதியற்ற 3,768 பஸ்களை இயக்கும் கே.எஸ்.ஆர்.டி.சி
பெங்களூரு

கர்நாடகத்தில் தகுதியற்ற 3,768 பஸ்களை இயக்கும் கே.எஸ்.ஆர்.டி.சி

தினத்தந்தி
|
4 July 2022 9:10 PM IST

கர்நாடகத்தில் தகுதியற்ற 3,768 பஸ்களை கே.எஸ்.ஆர்.டி.சி. இயக்கி வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகி உள்ளது.

பெங்களூரு:

புதிய வாகன கொள்கை

கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் (கே.எஸ்.ஆர்.டி.சி.) சார்பில் கர்நாடகத்திற்குள்ளும், தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா, மராட்டியத்திற்கும் பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த நிலையில் சமீபகாலமாக கர்நாடக அரசு பஸ்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி கொள்ளும் சம்பவங்கள் நடந்து வருகின்றன. விபத்தில் சிக்கும் பெரும்பாலான அரசு பஸ்கள் 9 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடியவை என்று கூறப்படுகிறது.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு 9 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடிய அரசு பஸ்களின் சேவையை நிறுத்திவிட்டு அந்த பஸ்களின் பாகங்களை அகற்ற வேண்டும் என்று மத்திய அரசு புதிய வாகன கொள்கையை வெளியிட்டு இருந்தது. ஆனால் கர்நாடகத்தில் 3,768 அரசு பஸ்கள் 9 லட்சம் கிலோ மீட்டர் தூரம் ஓடிய பின்னரும் சாலையில் பயணிக்க அதிகாரிகள் அனுமதி அளித்து உள்ளதாக கூறப்படுகிறது. அந்த பஸ்களால் தான் விபத்து நடப்பதாகவும் தகவல்கள் வெளியாகி உள்ளது.

1,500 புதிய பஸ்கள்

இதுகுறித்து கே.எஸ்.ஆர்.டி.சி. தலைவர் சந்திரப்பா எம்.எல்.ஏ. கூறும்போது, கர்நாடக அரசு போக்குவரத்து கழகம் சார்பில் 8,119 பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 9 லட்சம் கிலோ மீட்டருக்கு மேல் ஓடியும் சில பஸ்கள் இன்னும் பயன்படுத்தப்படு கிறது. கொரோனா ஊரடங்கு காரணமாக கர்நாடக அரசு போக்குவரத்து கழகத்திற்கு பெரும் நஷ்டம் ஏற்பட்டு உள்ளது. அந்த நஷ்டத்தை தற்போது தான் சரிசெய்யும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். புதிதாக 1,500 பஸ்களை கொள்முதல் செய்ய அரசிடம் அனுமதி கேட்டு உள்ளோம் என்றார்.

மேலும் செய்திகள்