< Back
பெங்களூரு
கார்வார்; கத்தியால் குத்தி பெண் கொலை
பெங்களூரு

கார்வார்; கத்தியால் குத்தி பெண் கொலை

தினத்தந்தி
|
19 Oct 2023 12:15 AM IST

கார்வார் அருகே கத்தியால் குத்தி பெண் கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தொழிலாளியை போலீசார் தேடி வருகிறார்கள்.

மங்களூரு-

உத்தர கன்னடா மாவட்டம் கார்வார் அருகே உள்ள முருடேஸ்வர் பகுதியை சேர்ந்தவர் லோகேஷ் நாயக் (வயது 34). கூலி தொழிலாளி. இவரது மனைவி நந்தினி நாயக். இந்தநிலையில் கடந்த சில நாட்களாக கணவன், மனைவிக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது. இந்தநிலையில் நேற்று முன்தினம் லோகேஷ் வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்தார்.

அப்போது அவருக்கும் நந்தினிக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் கோபமடைந்த லோகேஷ், அருகில் கிடந்த கத்தியை எடுத்து நந்தினியின் கழுத்து பகுதியில் குத்தினார். இதில், ரத்த வெள்ளத்தில் அவர் சரிந்து விழுந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இதையடுத்து லோகேஷ் அங்கிருந்து தப்பி சென்றார்.

இதுகுறித்து தகவல் அறிந்த முருடேஸ்வர் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் நந்தினியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கார்வார் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இந்த சம்பவம் குறித்து முருடேஸ்வர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். மேலும் தப்பியோடிய லோகேசையும் வலைவீசி தேடி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்