< Back
பெங்களூரு
கோலார் தங்கவயலில் கன்னட ராஜ்யோத்சவா  கொண்டாட்டம்
பெங்களூரு

கோலார் தங்கவயலில் கன்னட ராஜ்யோத்சவா கொண்டாட்டம்

தினத்தந்தி
|
12 Oct 2023 12:15 AM IST

கோலார் தங்கவயலில் வருகிற 1-ந் தேதி கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாடப்படுகிறது.

கோலார் தங்கவயல்

கர்நாடக மாநிலம் இதற்கு முன்பு மைசூரு மாகாணமாக இருந்தது. இதையடுத்து அது கர்நாடக மாநிலமாக மாற்றப்பட்டது. இதை நினைவு கூறும் வகையில் கர்நாடக மாநிலம் உருவான தினமான நவம்பர் மாதம் 1-ந் தேதி ஒவ்வொரு ஆண்டும் கன்னட ராஜ்யோத்சவா விழாவாக கொண்டாடப்பட்டு வருகிறது.

அதன்படி இந்த ஆண்டு கோலார் தங்கவயலில் இந்த கன்னட ராஜ்யோத்சவா விழா கொண்டாட்டம் குறித்து மினிவிதானசவுதாவில் உள்ள தாலுகா அலுவலகத்தில் தாசில்தார் நாகவேணி தலைமையில் ஆலோசனை கூட்டம் நடந்தது. இந்த கூட்டத்தில தாசில்தார் நாகவேணி பேசியதாவது:-

மைசூரு மாகாணமாக இருந்தது கர்நாடக மாநிலமாக மாற்றப்பட்டது. இதை நினைவுப்படுத்தும் வகையில் ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மாதம் 1-ந் தேதி கர்நாடக ராஜ்யோத்சவா கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டும் அதேபோல ராஜ்யோத்சவா விழாவை கொண்டாட தாலுகா நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த ராஜ்யோத்சவா விழாவில் எந்த மொழிபாகுபாடும் இல்லாமல் அனைவரும் கலந்து கொள்ளவேண்டும். கன்னடர்கள் மட்டுமே கலந்து கொள்ளவேண்டும் என்று நினைத்துவிடகூடாது. கர்நாடக மாநிலம் உருவான நாளை கொண்டாடுகிறோம். அந்த விழாவை கொண்டாட இங்கு வசித்து வரும் பிற மொழி மக்களுக்கும் உரிமை உண்டு.

இந்த விழா நிகழ்ச்சியில் எந்தவிதமான அசம்பாவித சம்பவங்களும் நடைபெற கூடாது. அதற்கான ஏற்பாடுகளை போலீசார் செய்திருக்கவேண்டும். விழா நடைபெறும் இடங்களில் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கவேண்டியது தாலுகா நிர்வாக அதிகாரிகளின் பொறுப்பு.

அதனை அவர்கள் சரியாக செய்து முடிக்கவேண்டும். இதற்கு எம்.எல்.ஏ. தரப்பில் முழு ஒத்துழைப்பு அளிப்பதாக கூறப்பட்டுள்ளது. எனவே இந்த விழாவை நாம் சிறப்பாக கொண்டாடவேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

மேலும் செய்திகள்