< Back
பெங்களூரு
கல்கட்டகி; மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து வீட்டில் பயங்கர தீ விபத்து
பெங்களூரு

கல்கட்டகி; மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து வீட்டில் பயங்கர தீ விபத்து

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

கல்கட்டகியில் மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

உப்பள்ளி-

கல்கட்டகியில் மின்சார ஸ்கூட்டர் பேட்டரி வெடித்து வீட்டில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டு ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமானது.

மின்சார ஸ்கூட்டர் வெடித்து...

தார்வார் மாவட்டம் கல்கட்டகி டவுன் பி.குடியாலா கிராமத்தை சேர்ந்தவர் பசய்யா ஹிரேமட். இவர் மின்சார ஸ்கூட்டர் வைத்திருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மாலை பசய்யா, தனது வீட்டின் முன்பு மின்சார ஸ்கூட்டரை நிறுத்தி இருந்தார். மேலும் அவர் மற்றும் குடும்பத்தினர் ெவளியே சென்றிருந்தார். இந்த நிலையில், திடீரென்று மின்சார ஸ்கூட்டரின் பேட்டரி ெவடித்து சிதறியது.

இதன்காரணமாக வீட்டில் தீப்பிடித்து எாிந்தது. அந்த தீ, மளமளவென வீடு முழுவதும் பரவி கொழுந்துவிட்டு எரிந்தது. இதனை பார்த்த அக்கம்பக்கத்தினர், உடனடியாக தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவித்தனர்.

ரூ.15 லட்சம் பொருட்கள்

அதன்பேரில் தீயணைப்பு படையினர் விரைந்து வந்து பார்வையிட்டனர். பின்னர் போலீசார், தண்ணீரை பீய்ச்சி அடித்து போராடி தீயை அணைத்தனர். ஆனாலும் அதற்குள் வீட்டில் இருந்த பொருட்கள் அனைத்தும் எரிந்து நாசமானது. அதாவது வீட்டில் இருந்த டி.வி. உள்ளிட்ட ரூ.15 லட்சம் மதிப்பிலான பொருட்கள் தீயில் கருகி நாசமானது தெரியவந்தது. அதிர்ஷ்டவசமாக வீட்டில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. இதுகுறித்து கல்கட்டகி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

மேலும் செய்திகள்