< Back
பெங்களூரு
பெங்களூரு
கபடி வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை
|28 Oct 2023 12:15 AM IST
கபடி வீராங்கனை தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
பெங்களூரு-
ஹாசன் மாவட்டம் ெசன்னராயப்பட்டணா தாலுகா திம்மலாபுரா கிராமத்தை சேர்ந்தவர் தனலட்சுமி (வயது 25). இவர் கபடி வீராங்கனை ஆவார். சர்வதேச கபடி போட்டிகளில் அவர் கலந்து கொண்டு பதக்கங்கள் வாங்கி உள்ளார். தற்போது அவர் பெங்களூரு காடுகோடியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார்.
இதற்காக அவர் நெலமங்களா டவுன் பகுதியில் தங்கி இருந்தார். இந்த நிலையில் தனலட்சுமி தனது தோழிகளுடன் மைசூரு தசரா பார்ப்பதற்கு சென்றார். பின்னர் பெங்களூருவுக்கு திரும்பினார்.
இந்த நிலையில் அவர் தனது அறையில் திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுபற்றிய தகவல் அறிந்ததும் நெலமங்களா டவுன் போலீசார் விரைந்து வந்து அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். அவருடைய தற்கொலைக்கான காரணம் தெரியவில்லை.
இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.