< Back
பெங்களூரு
இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியும் பெறுகிறார்  எஸ்.எம்.கிருஷ்ணா உள்பட 3 பேருக்கு சர்வதேச கெம்பேகவுடா விருது
பெங்களூரு

இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தியும் பெறுகிறார் எஸ்.எம்.கிருஷ்ணா உள்பட 3 பேருக்கு சர்வதேச கெம்பேகவுடா விருது

தினத்தந்தி
|
25 Jun 2022 10:48 PM IST

இன்போசிஸ் தலைவர் நாராயணமூர்த்தி, எஸ்.எம்.கிருஷ்ணா உள்பட 3 பேர் சர்வதேச கெம்பேகவுடா விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர். அவர்களுக்கு திங்கட்கிழமை விருது வழங்கப்பட உள்ளது.

பெங்களூரு:

எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கு விருது

கர்நாடக அரசு சார்பில் பல்வேறு துறைகளில் சிறப்பு வாய்ந்தவர்களுக்கும், சாதனை படைத்தவர்களுக்கும் சர்வதேச கெம்பேகவுடா விருது வழங்கப்பட்டு கவுரவிக்கப்பட்டு வருகிறது. அதன்படி, இந்த ஆண்டு சர்வதேச கெம்பேகவுடா விருதுக்கு முன்னாள் முதல்-மந்திரி எஸ்.எம்.கிருஷ்ணா, இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்தி, பேட்மிண்டன் விளையாட்டு வீரர் பிரகாஷ் படுகோனே ஆகிய 3 பேரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

அவர்கள் 3 பேருக்கும் நாளை(திங்கட்கிழமை) பெங்களூரு விதானசவுதாவில் நடைபெறும் அரசு நிகழ்ச்சியில் கெம்பேகவுடா விருதை முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை வழங்க உள்ளார். இதுகுறித்து பெங்களூருவில் நேற்று உயர்கல்வித்துறை மந்திரி அஸ்வத் நாராயண் நிருபா்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:-

சட்டம் போராட்டம் நடத்தப்படாது

கர்நாடக அரசு சார்பில் வழங்கப்படும் சர்வதேச கெம்பேகவுடா விருதுக்கு எஸ்.எம்.கிருஷ்ணா, நாராயணமூர்த்தி, பிரகாஷ் படுகோனே ஆகியோர் தேர்வு செய்யப்பட்டுள்ளனர். சமூக நலன் மற்றும் அரசியலில் சாதனை புரிந்ததற்காக எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும், தகவல் தொழில்நுட்ப துறையில் சாதனை புரிந்துள்ள இன்போசிஸ் தலைவர் நாராயண மூர்த்திக்கும், விளையாட்டு துறையில் சாதனை படைத்த முன்னாள் பேட்மிண்டன் வீரரான பிரகாஷ் படுகோனேவுக்கும் கெம்பேகவுடா சர்வதேச விருது வருகிற 27-ந் தேதி(நாளை) வழங்கப்பட உள்ளது.

பெங்களூரு சர்வதேச விமான நிலையத்தில் கெம்பேகவுடா சிலை அமைக்கும் பணிகள் இறுதி கட்டத்தில் உள்ளது. அந்த சிலையை முன்னாள் பிரதமர் தேவேகவுடா, டி.கே.சிவக்குமார், குமாரசாமி உள்ளிட்ட முக்கிய தலைவர்

களுடன் சேர்ந்து திறந்து வைக்கப்படும். மாநகராட்சி தேர்தல் விவகாரத்தில் சட்டத்தின்படியே வார்டு மறுசீரமைப்பு உள்ளிட்ட பணிகள் நடந்து வருகிறது. மாநகராட்சி தேர்தலை தள்ளிவைக்க அரசுக்கு எண்ணம் இல்லை. இதற்காக எந்த சட்ட போராட்டமும் நடத்தப்படாது.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்