< Back
பெங்களூரு
பெங்களூரு
பெண் கொலையில் :2 வாலிபர்கள் கைது
|11 Aug 2022 11:34 PM IST
பெண் கொலையில் 2 வாலிபர்களை போலீசார் கைது செய்துள்ளனர்.
பெங்களூரு:
பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் அருகே சூரியாநகர் போலீஸ் எல்லைக்குட்பட்ட லட்சுமிசாகரா பகுதியில் வாடகை வீட்டில் வசித்து வந்தவர் மாதம்மா (வயது 45). கணவரை பிரிந்த இவர் வானகனஹள்ளியை சேர்ந்த மணி (26) என்பவருடன் ஒன்றாக வசித்து வந்தார். இந்த நிலையில் மாதம்மா கடந்த 1-ந் தேதி கொலை செய்யப்பட்டார்.
இதுகுறித்து சூர்யாநகர் போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். அவர்கள் நடத்திய விசாரணையில், கொலையில் தொடர்புடையதாக வாலிபர்களான மணி மற்றும் அவரது நண்பர் சேத்தன் (27) ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரித்தனர். அப்போது வாங்கிய கடனை திருப்பி தராததால், மாதம்மாவை கட்டையால் அடித்து அவர்கள் கொலை செய்தது தெரியவந்தது.