சிறுமி பலாத்கார வழக்கில்; வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை
|சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் வாலிபருக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டணை விதித்து மண்டியா கோர்ட்டு தீர்ப்பளித்து உத்தரவிட்டுள்ளது.
மண்டியா:
சிறுமி பலாத்காரம்
மண்டியா மாவட்டம் நாகமங்களா தாலுகா ஆதி சுஞ்சனகிரி பகுதியில் சிறுமி ஒருவள் வசித்து வருகிறாள். இந்த நிலையில் அதேபகுதியை சேர்ந்த அசோக் என்ற வாலிபர் கடந்த 2020-ம் ஆண்டு ஜூலை 3-ம் தேதி சிறுமி வீட்டில் தனியாக இருந்தபோது உள்ளே சென்று பலாத்காரம் செய்துள்ளார்.
மேலும் நடந்த சம்பவத்தை வெளியே கூறினால் கொலை செய்துவிடுவதாக மிரட்டல் விடுத்துள்ளார். ஆனாலும் சிறுமி, தனது குடும்பத்தினரிடம் நடந்த விஷயத்தை கூறினாள்.
இதைகேட்டு அதிர்ச்சி அடைந்த குடும்பத்தினர், பேலூர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து அசோக்கை கைது செய்தனர். மேலும் அவர் மீது போக்சோ சட்டத்தில் வழக்குப்பதிவு செய்துகொண்டனர்.
20 ஆண்டுகள் சிறை
இந்த வழக்கு மண்டியா சிறப்பு கோர்ட்டில் விசாரணை நடந்து வந்தது. நேற்று வழக்கை விசாரணை நடத்திய நீதிபதி தீர்ப்பு கூறினார். அப்போது சிறுமியை பலாத்காரம் செய்தது நிரூபணமானதால் அசோக்குக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டணையும், ரூ.80 ஆயிரம் அபராதமும் விதித்து தீர்ப்பளித்து உத்தரவிட்டார். மேலும் அபராத தொகையை செலுத்த தவறினால் கூடுதலாக 4 ஆண்டுகள் சிறை தண்டணை அனுபவிக்கவேண்டும் என்று தனது தீர்ப்பில் கூறினார்.