< Back
பெங்களூரு
பிளிகிரி ரங்கனபெட்டாவில்:  காட்டுயானை தாக்கி வன ஊழியர் சாவு
பெங்களூரு

பிளிகிரி ரங்கனபெட்டாவில்: காட்டுயானை தாக்கி வன ஊழியர் சாவு

தினத்தந்தி
|
27 July 2022 10:58 PM IST

பிலிகிரி ரங்கனபெட்டாவில் காட்டுயானை தாக்கி வனத்துறை ஊழியர் ஒருவர் இறந்துள்ளார்.

கொள்ளேகால்:

சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ளது பிளிகிரி ரங்கநாத சாமி புலிகள் பாதுகாக்கப்பட்ட சரணாலயம். இந்த வனப்பகுதியில் கேகுடி பகுதியில் கண்காணிப்பாளராக வேலை பார்த்து வந்தவர் கிேஷார். நேற்று முன்தினம் இவர் கேகுடி பகுதியில் பணியில் ஈடுபட்டிருந்தார். அப்போது வனப்பகுதியில் இருந்து கேகுடிக்கு வந்த காட்டுயானை ஒன்று கிஷோர் தாக்கி, காலால் மிதித்து கொன்றுவிட்டு சென்றனர்.

நேற்று காலை இது வனத்துறை அதிகாரிகளுக்கு தெரியவந்தது. அவர்கள் சென்று உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இந்த தகவல் அறிந்து கிஷோர் குடும்பத்தினர் அரசு உரிய நடவடிக்கை எடுப்பதுடன், நிவாரணத்தொகையும், குடும்பத்தில் ஒருவருக்கும் அரசு வேலையும் வழங்கவேண்டும் என்று கோரிக்ைக வைத்துள்ளனர். இதை ஏற்ற வனத்துறை அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளனர்.

மேலும் செய்திகள்