பெங்களூருவில், 8 லட்சம் லிட்டர் டீசல் கையிருப்பு உள்ளது-மந்திரி ஸ்ரீராமுலு பேட்டி
|\பெங்களூரு பி.எம்.டி.சி. பணிமனைகளில் 8 லட்சம் லிட்டர் டீசல் கையிருப்பு உள்ளதாக போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு கூறியுள்ளார்.
பெங்களூரு:
சில்லரை சந்தைகள்
பெங்களூருவில் பி.எம்.டி.சி. பஸ்களின் பணிமனைகளுக்கு டீசல் வினியோகம் செய்ய கூடாது என்று பெட்ரோல் விற்பனை நிலையங்களுக்கு எண்ணெய் நிறுவனங்கள் அறிவுறுத்தி இருப்பதாக கூறப்படுகிறது.
இதனால் நகரில் பஸ்களை இயக்குவதில் சிக்கல் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து போக்குவரத்து மந்திரி ஸ்ரீராமுலு பெங்களூருவில் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-
டீசல் கையிருப்பு
பெங்களூருவில் உள்ள பி.எம்.டி.சி. பணிமனைகளில் 8 லட்சம் லிட்டர் டீசல் கையிருப்பு உள்ளது. நகரில் அனைத்து பஸ்களும் தங்கு தடையின்றி இயக்கப்படுகின்றன. டீசல் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக வெளியான தகவல் தவறானது.
நாங்கள் எண்ணெய் நிறுவனங்களுடன் பேசி வருகிறோம். டீசல் வினியோகத்தில் எந்த பிரச்சினையும் ஏற்படாமல் பார்த்து கொள்ளப்படும். அதனால் போக்குவரத்து சேவையில் எந்த சிக்கலும் ஏற்படாது.
இவ்வாறு ஸ்ரீராமுலு கூறினாா்.