< Back
பெங்களூரு
கார் மோதியதில்   4 பேர் படுகாயம்
பெங்களூரு

கார் மோதியதில் 4 பேர் படுகாயம்

தினத்தந்தி
|
8 Aug 2022 11:14 PM IST

சிக்பள்ளாப்பூரில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 4 பேர் படுகாயமடைந்தனர்.

சிக்பள்ளாப்பூர்:

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிட்லகட்டா தாலுகா ஏ.ஹூனசேனஹள்ளி கிராமத்தை சேர்ந்தவர் முனிராஜ். விவசாயியான இவர், தனது மனைவி நயணா, தனது பிள்ளைகளான நிகில் மற்றும் விஷாக் ஆகியோருடன் ஒரே மோட்டார் சைக்கிளில் ஒருவேலை விஷயமாக சிக்பள்ளாப்பூருவுக்கு சென்றுவிட்டு திரும்பி வந்துகொண்டிருந்தனர். சிட்லகட்டா அருகே வந்தபோது கார் ஒன்று முனிராஜ் சென்ற மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் மோட்டார் சைக்கிளில் இருந்து கீழே விழுந்த முனிராஜ் பலத்த காயமடைந்தார். அவரது மனைவி, பிள்ளைகளும் காயம் அடைந்தனர். அவர்களை, அருகில் இருந்தவர்கள் உடனடியாக மீட்டு சிகிச்சைக்காக சிட்லகட்டா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதில் பலத்த காயமடைந்த முனிராஜ், மேல் சிகிச்சைக்காக பெங்களூருவில் உள்ள ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

மேலும் செய்திகள்