கோலார் தங்கவயலில் 5 ஆயிரம் இல்லத்தரசிகளுக்கு கிரகலட்சுமி திட்டத்தின் பயன் கிடைக்கவில்லை
|கோலார் தங்கவயலில் 5 ஆயிரம் இல்லத்தரசிகளுக்கு கிரகலட்சுமி திட்டத்தின் பயன் கிடைக்கவில்லை என்றும், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயலில் 5 ஆயிரம் இல்லத்தரசிகளுக்கு கிரகலட்சுமி திட்டத்தின் பயன் கிடைக்கவில்லை என்றும், இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கிரகலட்சுமி திட்டம்
கர்நாடக சட்டசபைக்கு கடந்த மே மாதம் பொதுத்தேர்தல் நடந்தது. அதில் காங்கிரஸ் கட்சி 135 தொகுதிகளில் வெற்றிபெற்று ஆட்சியை பிடித்தது. முன்னதாக காங்கிரசார் தாங்கள் ஆட்சிக்கு வந்தால் பெண்களுக்கு அரசு பஸ்களில் இலவச பயணம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை, அன்னபாக்யா திட்டத்தில் வீட்டில் உள்ள உறுப்பினர்களை கணக்கிட்டு தலா 10 கிலோ ரேஷன் அரிசி, வீடுகளுக்கு 200 யூனிட் இலவச மின்சாரம் மற்றும் படித்து வேலையில்லாமல் இருக்கும் இளைஞர்களுக்கு மாதந்தோறும் தலா ரூ.3 ஆயிரம் ஊக்கத்தொகை ஆகியவற்றை வழங்கப்படும் என்று அறிவித்தனர்.
அதன்படி காங்கிரசார் வீடுகளுக்கு இலவச மின்சாரம் வழங்கும் திட்டம், இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்கும் திட்டம் உள்பட அவர்கள் அறிவித்த 4 திட்டங்களையும் அமல்படுத்திவிட்டனர்.
அதிகாரிகள் நடவடிக்கை
இதில் இல்லத்தரசிகளுக்கு மாதந்தோறும் தலா ரூ.2 ஆயிரம் வழங்கும் கிரகலட்சுமி திட்டம் தொடங்கப்பட்டு மாநிலம் முழுவதும் உள்ள இல்லத்தரசிகள் உதவித்தொகை பெற்று வருகிறார்கள். ஆனால் பல இடங்களில் தகுதி உள்ள இல்லத்தரசிகள் விண்ணப்பித்தும் அவர்களுக்கு கிரக லட்சுமி திட்டத்தின் பயன் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது. அதுபோல் கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகாவில் சுமார் 5 ஆயிரம் இல்லத்தரசிகளுக்கு கிரக லட்சுமி திட்டத்தின் பயன் கிடைக்கவில்லை என்றும், அந்த திட்டத்தின் பயன் கிடைக்க சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தினமும் ஆயிரக்கணக்கான பெண்கள் தாசில்தார் அலுவலகத்திற்கு சென்று கிரக லட்சுமி திட்டத்தின் கீழ் உதவித்தொகை கேட்ட வண்ணம் உள்ளனர். ஆனால் அவர்களுக்கு பதில் சொல்ல தாசில்தார் அலுவலகத்தில் உரிய அதிகாரிகள் யாரும் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் இல்லத்தரசிகள் வருத்தம் அடைந்துள்ளனர்.
பொதுமக்கள் கோரிக்கை
இதுபற்றி புகார் தெரிவிக்கவும், கிரக லட்சுமி திட்டத்தின் பயன் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும் கோரி தாசில்தார் நாகவேணியை சந்திக்க இல்லத்தரசிகள் முயற்சித்தும், அங்குள்ள ஊழியர்கள் தாசில்தாரை சந்திக்க அனுமதிப்பதில்லை என்று குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுமட்டுமின்றி ரேஷன் கடைகளில் அரிசிக்கு பதில் வழங்கப்படும் பணமும் தங்களுக்கு கிடைக்கவில்லை என்று ஏராளமானோர் குமுறுகிறார்கள்.
இதுபற்றி சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.