< Back
பெங்களூரு
பெங்களூரு
அரசு பஸ் மோதி பெண் பரிதாப சாவு
|9 Jun 2022 9:51 PM IST
பெங்களூருவில் அரசு பஸ் மோதி பெண் பரிதாபமாக உயிரிழந்தார்.
பெங்களூரு:
பெங்களூரு வடக்கு தாலுகா தாசனபுரா அருகே தேசிய நெடுஞ்சாலையில் ஒரு பெண் நடந்து சென்றார். பின்னர் அவர், அங்குள்ள தேசிய நெடுஞ்சாலையை கடந்து செல்ல முயன்றார். அப்போது அவர் மீது கே.எஸ்.ஆர்.டி.சி. (அரசு) பஸ் மோதியது. இதில், தூக்கி வீசப்பட்ட அவர் தலையில் பலத்தனகாயம் அடைந்து இறந்து விட்டார்.
போலீஸ் விசாரணையில், பலியான பெண் தாசனபுராவை சேர்ந்த கவுரம்மா (வயது 45) என்று தெரிந்தது. இதுகுறித்து நெலமங்களா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவரை கைது செய்துள்ளனர்.