< Back
பெங்களூரு
கோஸ்ட் படம் ெவளியான தியேட்டரின் கண்ணாடி உடைப்பு-  பரபரப்பு
பெங்களூரு

'கோஸ்ட்' படம் ெவளியான தியேட்டரின் கண்ணாடி உடைப்பு- பரபரப்பு

தினத்தந்தி
|
20 Oct 2023 12:15 AM IST

நடிகர் சிவராஜ்குமார் நடித்த ‘கோஸ்ட்’ படம் ெவளியான தியேட்டரின் கண்ணாடி உடைப்பு இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

பெங்களூரு -

கன்னட திரையுலகில் பிரபல நடிகராக இருந்து வருபவர் சிவராஜ்குமார். இவர் நடித்துள்ள 'கோஸ்ட்' என்ற படம் நேற்று வெளியானது. பெங்களூருவில் உள்ள சந்தோஷ் தியேட்டரில் கோஸ்ட் படம் திரையிடப்பட்டு இருந்தது. இந்த படத்தை பார்க்க நேற்று அதிகாலையில் ரசிகர்கள் தியேட்டர் முன்பாக திரண்டு இருந்தார்கள். ஆனால் ரசிகர்களை தியேட்டருக்குள் அனுப்ப தாமதம் செய்யப்பட்டதாக கூறப்படுகிறது.

இதன் காரணமாக ஆத்திரமடைந்த ரசிகர்கள் தியேட்டருக்குள் சென்றனர். பின்னர் தியேட்டரின் அலுவலகத்தில் இருந்த கண்ணாடிகளை ரசிகர்கள் உடைத்தார்கள். அந்த கண்ணாடி துண்டுகள் ஆங்காங்கே சிதறி கிடந்தது. இதனை கவனிக்காமல் தியேட்டர் ஊழியர் மிதித்து விட்டார்.

இதனால் அவரது காலில் கண்ணாடிகள் குத்தி பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். தியேட்டருக்குள் விடுவதற்கு தாமதமானதால் ரசிகர்கள் கண்ணாடியை உடைத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.


மேலும் செய்திகள்