< Back
பெங்களூரு
ராபர்ட்சன்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா:  501 பால்குடத்துடன் பெண்கள் ஊர்வலம்
பெங்களூரு

ராபர்ட்சன்பேட்டை முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழா: 501 பால்குடத்துடன் பெண்கள் ஊர்வலம்

தினத்தந்தி
|
13 Aug 2022 5:09 PM GMT

ராபர்ட்சன் பேட்டை முத்துமாரியம்மன் கோவில் ஆடித்திருவிழாவை முன்னிட்டு பெண்கள் பக்தர்கள் 501 பால்குடத்துடன் ஊர்வலமாக சென்றனர்.

கோலார் தங்கவயல்:

கோலார் தங்கவயல் ராபர்ட்சன்பேட்டை விவேக்நகரில் முத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் 86-வது ஆண்டு திருவிழா, கடந்த 12-ந்தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. நேற்று காலை 10 மணி அளவில் ராபர்ட்சன்பேட்டையில் உள்ள ஸ்ரீபிரசன்ன லட்சுமி வெங்கடேச பெருமாள் கோவிலில் 501 பால்குடங்களை வைத்து பெண் பக்தர்கள் சிறப்பு பூஜை செலுத்தினர்.

அதை தொடர்ந்து பம்பை, பேண்டு வாத்தியம் முழங்க பெண்கள் முதல் சிறுமிகள் வரை பால் குடங்களை ஏந்தி ஊர்வலமாக பிரிசர்ட்சாலை விவேக் நகர் மார்க்கமாக கோவிலை சென்றடைந்தனர். பின்னர் அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டு வழிபட்டனர்.

இன்று மதியம் கூழ் பானைகளுடன் வரும் பெண்கள் அம்மனுக்கு சிறப்பு பூஜை செய்த பின்னர் கூழ் ஊற்றப்படும். இரவு அம்மன் அலங்கரிக்கப்பட்ட தேரில் வீதி உலா நிகழ்ச்சி நடைபெற்ற உள்ளது.

மேலும் செய்திகள்