போலி கிளினிக், மருந்தகம் நடத்தியவர் கைது
|கோலார் தங்கவயலில் ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் போலி கிளினிக், மருந்தகத்தை நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
கோலார் தங்கவயல்:
கோலார் தங்கவயலில் ஏற்கனவே சீல் வைக்கப்பட்ட நிலையில் மீண்டும் போலி கிளினிக், மருந்தகத்தை நடத்தியவர் கைது செய்யப்பட்டார்.
போலி கிளினிக்
கோலார் மாவட்டம் கோலார் தங்கவயல் தாலுகா கேசம்பள்ளி பஞ்சாயத்துக்கு உட்பட்ட கெம்பாபுரா கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு உரிய அனுமதியின்றி போலி கிளினிக் மற்றும் மருந்தகம் நடப்பதாக அப்பகுதி பொதுமக்கள் சுகாதாரத்துறைக்கும், தாசில்தாருக்கும் தகவல் தெரிவித்தனர்.
அதன்பேரில் அங்கு சென்ற அதிகாரிகள் சட்டவிரோதமாக நடத்தி வந்த போலி கிளினிக் மற்றும் மருந்தகத்தின் உரிமையாளர் அப்பல நாயுடு என்பவரை பிடித்து விசாரணை நடத்தினர். மேலும் போலி கிளினிக் மற்றும் மருந்தகத்தை மூடும்படி உத்தரவிட்டனர். அதன்பின்னர் போலி கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு சீல் வைத்தனர்.
கைது
இந்த நிலையில் மீண்டும் போலி கிளினிக் மற்றும் மருந்தகத்தை அப்பல நாயுடு தொடர்ந்து நடத்துவதாக தாசில்தார் மற்றும் சுகாதார துறைக்கு புகார்கள் வந்தன. அதன் பேரில் நேற்று தாசில்தார் நாகவேணி சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் சம்பவ இடத்திற்கு சென்றார். பின்னர் அதிகாரிகள் அங்கு அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது அப்பல நாயுடு, போலி கிளினிக் மற்றும் மருந்தகம் நடத்தி வருவது தெரியவந்தது.
இதையடுத்து அப்பல நாயுடுவை பிடித்து போலீசாரிடம் அதிகாரிகள் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் அவரை கைது செய்தனர். மேலும் போலி கிளினிக் மற்றும் மருந்தகத்திற்கு அதிகாரிகள் சீல் வைத்தனர். அதைத்தொடர்ந்து கேசம்பள்ளி போலீசார் அப்பல நாயுடுவை போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.