< Back
பெங்களூரு
மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன்; சித்தராமையா கண்டனம்
பெங்களூரு

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன்; சித்தராமையா கண்டனம்

தினத்தந்தி
|
4 Aug 2022 10:55 PM IST

மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அளித்திருப்பது சித்தராமையா கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-

காங்கிரஸ் தலைவர்களை இலக்காக வைத்து பா.ஜனதா தனது அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையை தொடர்ந்து மேற்கொண்டுள்ளது. மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவுக்கு அமலாக்கத்துறை சம்மன் அனுப்பியுள்ளது.

இதை கண்டிக்கிறேன். நாடாளுமன்ற கூட்டத்தொடரை நடத்தாமல் இருக்க பா.ஜனதா சதி செய்துள்ளது. இதன் மூலம் பா.ஜனதா தனது தோல்விகளை மூடிமறைக்கும் நோக்கத்தில் மக்களின் கவனத்தை திசை திருப்புகிறது.

இவ்வாறு சித்தராமையா குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்