< Back
பெங்களூரு
வீட்டில் ஹோமம் நடத்திய டி.கே.சிவக்குமார்
பெங்களூரு

வீட்டில் ஹோமம் நடத்திய டி.கே.சிவக்குமார்

தினத்தந்தி
|
26 May 2022 9:06 PM IST

டி.கே.சிவக்குமார் தனது வீட்டில் ஹோமம் நடத்தினார்.

பெங்களூரு:

கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவராக இருப்பவர் டி.கே.சிவக்குமார். இவர் பெங்களூரு சதாசிவநகரில் உள்ள எஸ்.எம்.கே. இல்லத்தில் டி.கே.சிவக்குமார் சிறப்பு யாகம், ஹோமம் மற்றும் பூஜை நடத்தினார். இதில் அவரது குடும்பத்தினர் மட்டுமே பங்கேற்றுள்ளனர்.

அடுத்த ஆண்டு நடைபெறும் (2023) சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் அமோக வெற்றி பெற்று தான் முதல்-மந்திரியாக பதவி ஏற்கவும், தனது அரசியல் எதிரிகளின் சதிதிட்டத்தை முறியடிக்கவும் அவர் தனது வீட்டில் ஹோமம், யாகம் நடத்தியதாக தகவல் வெளியாகியுள்ளது.

மேலும் செய்திகள்