< Back
பெங்களூரு
பழமையான கட்டிடங்கள் இடித்து அகற்றம்  பெங்களூரு மாநகராட்சி அதிரடி முடிவு
பெங்களூரு

பழமையான கட்டிடங்கள் இடித்து அகற்றம் பெங்களூரு மாநகராட்சி அதிரடி முடிவு

தினத்தந்தி
|
7 Aug 2022 5:23 PM GMT

பழமையான கட்டிடங்களை இடித்து அகற்ற பெங்களூரு மாநகராட்சி முடிவு செய்துள்ளது.

பெங்களூரு:

பெங்களூரு அவென்யூ ரோட்டில் நேற்று முன்தினம் கனமழைக்கு 3 மாடி கட்டிடம் இடிந்து விழுந்தது. இந்த கட்டிடம் 100 ஆண்டுகள் பழமையானது என்பது தெரியவந்தது. இந்த நிலையில் பெங்களூருவில் பாழடைந்த கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்யப்படும் என்று மாநகராட்சி திட்ட சிறப்பு அதிகாரி ரவீந்திரா தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், பெங்களூருவில் கடந்த 2021-ம் ஆண்டு பெய்த கனமழைக்கு பழமையான 2 கட்டிடங்கள் இடிந்து விழுந்தன. அதையடுத்து பெங்களூருவில் உள்ள பழமையான கட்டிடங்கள் குறித்து ஆய்வு நடத்த அப்போதைய மாநகராட்சி கமிஷனர் கவுரவ் குப்தா உத்தரவிட்டு இருந்தார்.

இந்த நிலையில் தற்போது பெங்களூருவில் மிகவும் பழமையான கட்டிடம் இடிந்து விழுந்துள்ளது. எனவே கடந்த ஆண்டு ஆய்வு அறிக்கை அடிப்படையில், அல்லது தற்போது புதிய ஆய்வு நடத்தி அதில் கிடைக்கும் அறிக்கையின் அடிப்படையில் நகரில் உள்ள பழமையான மற்றும் பாழடைந்த கட்டிடங்களை முறையாக இடித்து அகற்ற நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.

மேலும் செய்திகள்