< Back
பெங்களூரு
பெங்களூரு

'தினத்தந்தி'புகார் பெட்டி செய்திகள்

தினத்தந்தி
|
1 Jun 2022 9:54 PM IST

நடைபாதையில் குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள்

நடைபாதையில் குவிந்து கிடக்கும் கட்டிட கழிவுகள்

பெங்களூரு ஒகலிபுரம் ரெயில்வே மேம்பாலம் அருகே ஒரு நடைபாதை உள்ளது. இந்த நடைபாதையில் கட்டிட கழிவுகள் குவித்து வைக்கப்பட்டு இருப்பதால் அந்த நடைபாதையை பாதசாரிகள் பயன்படுத்த முடிவது இல்லை. அந்த கட்டிட கழிவுகளை அகற்ற அதிகாரிகள் யாரும் நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் கூறப்படுகிறது. நடைபாதையை பயன்படுத்த முடியாததால் பாதசாரிகள் சாலையில் நடந்து செல்கின்றனர். அப்போது வேகமாக வரும் வாகனங்கள் பாதசாரிகள் மீது மோதிவிடவும் வாய்ப்பு உள்ளது. இதனை தடுக்க நடைபாதையில் இருக்கும் கட்டிட கழிவுகளை அகற்ற வேண்டும்.

-தாமோதரன், ஒகலிபுரம், பெங்களூரு.

கேட்பாரற்று கிடக்கும் குழாய் உருளை

பெங்களூரு ஸ்ரீராமபுரத்தில் இருந்து மாகடி ரோட்டிற்கு செல்லும் சாலையில் ஒரு நடைபாதை உள்ளது. அந்த நடைபாதையொட்டி பூமிக்கு அடியில் ராட்சத குழாய் பதிக்கும் பணி நடந்து வருகிறது. இந்த பணிக்காக கொண்டு வரப்பட்ட குழாய் ஒரு உருளையில் சுற்றப்பட்டு நடைபாதையின் நடுப்பகுதியில் வைக்கப்பட்டு உள்ளது. அது தற்போது கேட்பாரற்று கிடக்கிறது. இது பாதசாரிகளுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் உள்ளது. இதனால் அந்த குழாய் உருளையை அங்கிருந்து அகற்ற வேண்டும்.

-புவனேஸ்வரி, ஸ்ரீராமபுரம், பெங்களூரு.

மேலும் செய்திகள்