< Back
பெங்களூரு
சி.எஸ்.ஐ.ஆர். இயக்குனர் ஜெனரலாக நியமனம்:  கலைச்செல்விக்கு மயில்சாமி அண்ணாதுரை வாழ்த்து
பெங்களூரு

சி.எஸ்.ஐ.ஆர். இயக்குனர் ஜெனரலாக நியமனம்: கலைச்செல்விக்கு மயில்சாமி அண்ணாதுரை வாழ்த்து

தினத்தந்தி
|
7 Aug 2022 10:47 PM IST

சி.எஸ்.ஐ.ஆர் இயக்குனர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்ட கலைச்செல்விக்கு மயில்சாமி அண்ணாதுரை வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பெங்களூரு:

இந்திய அறிவியல்-தொழில் ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரலாக (சி.எஸ்.ஐ.ஆர்.) தமிழ்நாடு நெல்லை மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வி நியமிக்கப்பட்டுள்ளார். அந்த கவுன்சிலின் தலைமை பதவிக்கு முதல் முறையாக ஒரு பெண் நியமிக்கப்பட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதையொட்டி அவருக்கு பல்வேறு துறையினரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

சி.எஸ்.ஐ.ஆர் இயக்குனர் ஜெனரலாக நியமனம் செய்யப்பட்ட கலைச்செல்விக்கு மயில்சாமி அண்ணாதுரை வாழ்த்து தெரிவித்துள்ளார்.இந்த நிலையில் விண்வெளி விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை அவருக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இந்திய அறிவியல்-தொழில்துறை ஆராய்ச்சி கவுன்சில் இயக்குனர் ஜெனரலாக கலைச்செல்வி நியமிக்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அவருக்கு எனது இதயப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.

மேலும் செய்திகள்