< Back
பெங்களூரு
கிரிக்கெட் சூதாட்டம்;  2 பேர் கைது
பெங்களூரு

கிரிக்கெட் சூதாட்டம்; 2 பேர் கைது

தினத்தந்தி
|
2 Jun 2022 8:59 PM IST

பெங்களூருவில் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்ட 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

பெங்களூரு:

பெங்களூரு டி.ஜே.ஹள்ளி, பைரசந்திரா அருகே முனிநாகப்பா லே-அவுட் 5-வது கிராஸ் பகுதியில் சந்தேகப்படும்படியாக சுற்றிய 2 வாலிபர்களை பிடித்து மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்தனர். மேலும் அவர்களிடம் சோதனை நடத்திய போது பல லட்சம் ரூபாய் இருந்தது. அந்த பணம் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபட்டு தோல்வி அடைந்தவர்களிடம் இருந்து வாங்கி வைத்திருந்தது தெரியவந்த்து.

இதையடுத்து 2 வாலிபர்களும் கைது செய்யப்பட்டார்கள். அவர்கள் 2 பேரும் கிரிக்கெட் சூதாட்டத்தில் ஈடுபடுவதை தொழிலாக வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். அவர்களிடமிருந்து ரூ.10¾ லட்சம், 2 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 2 வாலிபர்கள் மீதும் டி.ஜே.ஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

மேலும் செய்திகள்