< Back
பெங்களூரு
காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சாதி அரசியலை கைவிட வேண்டும்: வாட்டாள் நாகராஜ் கோரிக்கை
பெங்களூரு

காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சாதி அரசியலை கைவிட வேண்டும்: வாட்டாள் நாகராஜ் கோரிக்கை

தினத்தந்தி
|
9 Aug 2022 11:10 PM IST

காங்கிரஸ், பா.ஜனதா கட்சிகள் சாதி அரசியலை கைவிடவேண்டும் என்று வாட்டாள் நாகராஜ் கோரிக்கை வைத்துள்ளார்.

கொள்ளேகால்:

கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரான வாட்டாள் நாகராஜ் நேற்று முன்தினம் சாம்ராஜ்நகரில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

ஏழைகள் ஏழைகளாகவே இருப்பதும், செல்வந்தர்கள் மேலும், மேலும் பணம் குவிப்பதும் ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ஜனதாவின் முரண்பாடான ஆட்சியால் தான். மாநிலத்தில் ஆன்மிக நோக்கத்தில் அரசியலை யாரும் செய்ய வேண்டாம். காங்கிரஸ், ஜனதா தளம்(எஸ்) மற்றும் பா.ஜனதா ஆகிய 3 கட்சிகளுமே சாதி அரசியலை கைவிட வேண்டும். கன்னட மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து அரசியல் செய்ய வேண்டும். சாதி, மதம் போன்றவற்றால் அரசியல் செய்வதால்தான் ஒருவரையொருவர் கொலை செய்து வருகிறார்கள். இது தடுக்கப்பட வேண்டும். மாநிலத்தில் கொலைகள் நடப்பதை தடுக்க வேண்டும் என்றால் அனைவரும் சாதி அரசியலை கைவிட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்