< Back
பெங்களூரு
மைசூரு அரண்மனையில் இசை நிகழ்ச்சிகள் ரத்து
பெங்களூரு

மைசூரு அரண்மனையில் இசை நிகழ்ச்சிகள் ரத்து

தினத்தந்தி
|
10 Oct 2023 12:15 AM IST

தசரா விழா நடப்பதால் மைசூரு அரண்மனையில் இசை நிகழ்ச்சிகள் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மைசூரு

உலக புகழ்பெற்ற மைசூரு தசரா விழா வருகிற 15-ந்தேதி தொடங்க உள்ளது. இதற்கான ஏற்பாடுகள் அனைத்தும் மைசூருவில் தீவிரமாக நடந்து வருகிறது. அரண்மனையில் சுத்தம் செய்யும் பணியும் மும்முரமாக நடந்து வருகிறது.

இந்த நிலையில் மைசூரு அரண்மனையில் சுத்தம் செய்யும் பணி நடப்பதால், அரண்மனையில் நடந்து வந்த இசை நிகழ்ச்சி தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.

மைசூரு தசரா நடக்க உள்ளதால் வருகிற 31-ந்தேதி வரை இந்த இசை நிகழ்ச்சி நடக்காது என்று மைசூரு அரண்மனை மண்டல நிர்வாகம் தெரிவித்துள்ளது. தசரா விழா முடிவடைந்த பிறகு இசை நிகழ்ச்சி மீண்டும் தொடங்கி நடக்கும் என தெரிகிறது.

மேலும் செய்திகள்