< Back
பெங்களூரு
மாலூரில் இரு தரப்பினரிடையே மோதல்
பெங்களூரு

மாலூரில் இரு தரப்பினரிடையே மோதல்

தினத்தந்தி
|
27 Oct 2023 12:15 AM IST

கோலார் அருகே மாலூரில் இரு தரப்பினரிடையே மோதல் அரிவாள், கத்தியுடன் வலம் வந்த வீடியோ வைரல்


கோலார்:

கோலார் மாவட்டம் மாலூர் தாலுகா கோரண்டஹள்ளி பகுதியில் கடந்த சில நாட்களாக இரு பிரிவினர்களிடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருவதாக கூறப்படுகிறது. இந்தநிலையில் நேற்று கோரண்டஹள்ளி பகுதியில் ஒரு பிரிவை சேர்ந்த சிலர் சாலையில் நின்று பேசி கொண்டிருந்தனர். அப்போது மற்றொரு பிரிவை சேர்ந்த வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் வந்தனர். அவர்களுக்கு சாலையில் நின்றவர்கள் வழிவிடவில்லை என்று கூறப்படுகிறது. இதனால் அவர்கள் வழிவிடும்படி கூறினார். இதனால் சாைலயில் நின்றவர்கள் வாகனங்களில் வந்தவர்களை மடக்கி பிடித்து தாக்கினர். இந்த தாக்குதலை தொடர்ந்து இருப்பிரிவினரிடையே பெரும் மோதலை ஏற்படுத்தியது. அப்போது அவர்கள் வீடுகளில் இருந்த அரிவாள் மற்றும் கத்தியை எடுத்து வந்து ஒருவரை ஒருவர் தாக்கு முயற்சித்தனர்.இதனை பார்த்த அந்த பகுதியை சேர்ந்த சில இரு தரப்பினரையும் மடக்கி பிடித்து சமாதானம் செய்ய முயன்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இந்நிலையில் இதுகுறித்து மாலூர் போலீசாருக்கு தகவல் அளிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போலீசார் இரு தரப்பினரிடையே பேச்சுவார்த்தை நடத்தினர்.

இதையடுத்து அவர்கள் சமாதம் அடைந்தனர். மேலும் இதுபோல மீண்டும் பிரச்சினைகளை ஏற்பட கூடாது என்று இரு தரப்பினரையும் போலீசார் எச்சரித்து அனுப்பி வைத்தனர். இந்த மோதலில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று கூறப்படுகிறது. இதற்கிடையில் இரு தரப்பினரும் கையில் ஆயுதங்களுடன் மோதி கொண்ட வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது.

Related Tags :
மேலும் செய்திகள்