< Back
பெங்களூரு
வருமான வரி சோதனை குறித்து சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் -பா.ஜனதா கட்சியினர் வலியுறுத்தல்
பெங்களூரு

வருமான வரி சோதனை குறித்து சி.பி.ஐ விசாரிக்கவேண்டும் -பா.ஜனதா கட்சியினர் வலியுறுத்தல்

தினத்தந்தி
|
15 Oct 2023 4:00 AM IST

கர்நாடகத்தில் நடந்த வருமான வரி சோதனையில் ரூ.42 கோடி சிக்கியது குறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த பா.ஜனதா கட்சியினர் வலியுறுத்தியுள்ளது.

பெங்களூரு:-

கர்நாடக பா.ஜனதா கட்சியை சேர்ந்த முன்னாள் மந்திரி ஆர்.அசோக் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

5 மாநில சட்டசபை தேர்தல்களுக்கு பணம் கொடுப்பதாக கட்சி மேலிடத்திற்கு கர்நாடக காங்கிரஸ் கூறியுள்ளது. காண்டிராக்டர்கள் தற்கொலை செய்து கொள்வதாக கூறியும் இந்த அரசு பாக்கியை வழங்கவில்லை. 5 மாநில தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதும் பாக்கியை பட்டுவாடா செய்தனர். குறிப்பிட்ட சில காண்டிராக்டர்களுக்கு மட்டுமே பாக்கியை விடுவித்து உள்ளதாக காண்டிராக்டர்கள் சங்க தலைவர் கெம்பண்ணா கூறியுள்ளார்.

காண்டிராக்டர் அம்பிகாபதி மூலம் பணத்தை வசூலித்து தெலுங்கானாவுக்கு அனுப்ப திட்டமிட்டு இருந்ததாக தெலுங்கானா மந்திரி ஒருவர் கூறியுள்ளார். வருமான வரி சோதனையில் ரூ.42 கோடி ரொக்கம் கிடைத்துள்ளது. இன்னும் தங்க நகைகள் மதிப்பிடப்படவில்லை. இந்த காங்கிரஸ் அரசு எந்த திசையில் சென்று கொண்டிருக்கிறது என்பது மக்களுக்கு நன்றாக புரிந்துள்ளது. ரூ.42 கோடி யாருடையது என்று மக்கள் கேட்கிறார்கள். இதுகுறித்து சி.பி.ஐ. விசாரணை நடத்த வேண்டும்.

இவ்வாறு ஆர்.அசோக் கூறினார்.

மேலும் செய்திகள்