< Back
பெங்களூரு
தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு
பெங்களூரு

தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிப்பு

தினத்தந்தி
|
17 Oct 2023 3:05 AM IST

கர்நாடக அணைகளில் இருந்து தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறப்பு அதிகரிக்கப்பட்டு உள்ளது. வினாடிக்கு 4,784 கனஅடி நீர் செல்கிறது.

மண்டியா:

மண்டியா மாவட்டம் ஸ்ரீரங்கப்பட்டணா தாலுகா கண்ணம்பாடி கிராமத்தில் காவிரி ஆற்றின் குறுக்கே கிருஷ்ணராஜ சாகர் (கே.ஆர்.எஸ்.) அணை அமைந்துள்ளது. 124.80 அடி உயரம் கொண்ட இந்த அணையில் நேற்று காலை நிலவரப்படி 101.24 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 3,569 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. அணையில் இருந்து வினாடிக்கு 3,984 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. நேற்று முன்தினம் வினாடிக்கு 3,706 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நீர் திறப்பு சற்று அதிகரிக்கப்பட்டுள்ளது.

இதேபோல், மைசூரு மாவட்டம் எச்.டி.கோட்டை தாலுகா பீச்சனஹள்ளியில் உள்ள கபினி அணையில் இருந்து நேற்று 800 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்டது. கடல் மட்டத்தில் இருந்து 2,284 அடி கொள்ளளவு கொண்ட கபினி அணையில் நேற்று காலை நிலவரப்படி 2,275.46 அடி தண்ணீர் இருந்தது. அணைக்கு வினாடிக்கு 927 கனஅடி தண்ணீர் வந்தது. நேற்று கர்நாடக அணைகளில் இருந்து வினாடிக்கு 4,784 கனஅடி தண்ணீர் காவிரியில் தமிழகத்துக்கு திறந்து விடப்பட்டது. நேற்று முன்தினம் வினாடிக்கு 4,506 கனஅடி தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில், நேற்று அது அதிகரிக்கப்பட்டு வினாடிக்கு 4,784 கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

மேலும் செய்திகள்