< Back
பெங்களூரு
பெங்களூருவில் ஆயுதத்தால் தாக்கி தச்சு தொழிலாளி கொலை
பெங்களூரு

பெங்களூருவில் ஆயுதத்தால் தாக்கி தச்சு தொழிலாளி கொலை

தினத்தந்தி
|
16 Oct 2023 12:15 AM IST

பெங்களூருவில் ஆயுதத்தால் தாக்கி தச்சு தொழிலாளி கொலை செய்யப்பட்டார்.

சம்பிகேஹள்ளி:

பெங்களூரு சம்பிகேஹள்ளி போலீஸ் எல்லைக்கு உட்பட்ட கோகிலு லே-அவுட், 3-வது கிராசில் மார்டின் என்பவர் சொந்தமாக வீடு கட்டி வருகிறார். அங்கு தண்ணீர் தொட்டி அமைக்க குழி தோண்டப்பட்டு இருந்தது. அந்த குழிக்குள் ஒரு நபர் துணியால் சுத்தப்பட்டு அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். இதை பார்த்து மார்டின் மற்றும் தொழிலாளிகள் அதிர்ச்சி அடைந்தனர். இதுபற்றி உடனடியாக சம்பிகேஹள்ளி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் விரைந்து வந்து அந்த நபரின் உடலை கைப்பற்றி விசாரித்தனர். அப்போது அவர், பெல்லஹள்ளியை சேர்ந்த சகீல் அக்தர் (வயது 28) என்று தெரிந்தது.

அவர், தச்சு தொழிலாளியாக வேலை செய்துள்ளார். சகீல் அக்தரின் உடல் அழுகிய நிலையில் இருந்ததால் கடந்த 4 நாட்களுக்கு முன்பாகவே, அவரை ஆயுதத்தால் தாக்கி வேறு இடத்தில் வைத்து கொலை செய்து விட்டு, அவரது உடலை மார்டின் புதிதாக கட்டிவரும் வீட்டில் போட்டு விட்டு சென்றது தெரியவந்தது. சகீல் அக்தரை கொலை செய்த மர்மநபர்கள் யார்?. என்ன காரணத்திற்காக அவர் கொலை செய்யப்பட்டார்? என்பது தெரியவில்லை. இதுகுறித்து சம்பிகேஹள்ளி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள். கொலையாளிகளை போலீசார் வவைீசி தேடிவருகிறார்கள்.

மேலும் செய்திகள்