சதானந்தகவுடாவுக்கு பா.ஜனதா தலைமை அழைப்பு
|சதானந்தகவுடாவுக்கு பா.ஜனதா தலைமை அழைப்பு விடுத்துள்ளது.
பெங்களூரு:
கர்நாடகத்தில் ஜனதாதளம்(எஸ்) கட்சியும், பா.ஜனதாவும் கூட்டணி அமைத்துள்ளது. இதற்கு முன்னாள் மத்திய மந்திரி சதானந்தகவுடா எதிர்ப்பு தெரிவித்ததுடன், கூட்டணி விவகாரத்தில் கர்நாடக தலைவர்களை ஒதுக்கி வைத்துவிட்டு, தேசிய தலைவர்களே முடிவு செய்து விட்டதாக அதிருப்தி தெரிவித்திருந்தார். இந்த நிலையில், பா.ஜனதா தலைமையை சந்தித்து பேசுவதற்காக வருகிற 25-ந் தேதி டெல்லிக்கு வரும்படி சதானந்தகவுடாவுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
பா.ஜனதா தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, வருகிற 25-ந் தேதி தன்னை டெல்லியில் வந்து சந்தித்து பேசும்படி சதானந்தகவுடாவுக்கு அழைப்பு விடுத்துள்ளார். இதையடுத்து, டெல்லிக்கு செல்ல தயாராகி வரும் சதானந்தகவுடா, ஜே.பி.நட்டா மட்டுமின்றி மேலும் சில தலைவர்களை சந்தித்து கர்நாடக அரசியல் நிலவரம் மற்றும் பா.ஜனதா, ஜனதாதளம் (எஸ்) கட்சிகளின் கூட்டணி குறித்து விரிவாக பேச இருக்கிறார்.