< Back
பெங்களூரு
பெங்களூரு
பெண்ணை குத்திக் கொல்ல முயற்சி; கணவர் கைது
|15 Jun 2022 8:59 PM IST
பெங்களூருவில் பெண்ணை குத்திக் கொல்ல முயன்ற கணவரை போலீசார் கைது செய்தனர்.
பெங்களூரு:
பெங்களூரு கெங்கேரி அருகே வினாயகா லே-அவுட்டை சேர்ந்தவர் ரவி (வயது 57). இவரது மனைவி மஞ்சுளா (49). இந்த தம்பதிக்கு 2 பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில், மஞ்சுளாவின் நடத்தையில் சந்தேகப்பட்டு ரவி அடிக்கடி சண்டை போட்டு வந்ததாக கூறப்படுகிறது. அதுபோல், நேற்று முன்தினமும் அவர்களுக்குள் வாக்குவாதம் உண்டானது. அப்போது ஆத்திரமடைந்த ரவி, வீட்டில்கிடந்த கத்தியால் மஞ்சுளாவை சரமாரியாக குத்தினார்.
இதில், படுகாயம் அடைந்த அவர் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார். மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு, அவரை கொல்ல ரவி முயன்றது தெரியவந்தது. இதுகுறித்து கெங்கேரி போலீசார் வழக்குப்பதிவு செய்து ரவியை கைது செய்துள்ளனர்.