< Back
பெங்களூரு
ஆண்டர்சன்பேட்டையில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க வலுக்கும் கோரிக்கை
பெங்களூரு

ஆண்டர்சன்பேட்டையில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க வலுக்கும் கோரிக்கை

தினத்தந்தி
|
15 Oct 2023 12:15 AM IST

ஆண்டர்சன்பேட்டையில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று தொகுதி எம்.எல்.ஏ.விடம் கோரிக்கை வைத்தனர்.

கோலார் தங்கவயல்

கோலார் தங்கவயலில் ஆண்டர்சன்பேட்டை-மாரிகுப்பம் இடையே ஏராளமான ஆட்டோக்கள் இயங்கி வருகிறது. இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் அனைவருக்கும் ஆண்டர்சன்பேட்டையில் சங்கம் செயல்பட்டு வருகிறது. இந்த ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கம் அரசு அங்கீகாரம் பெற்று செயல்பட்டு வருகிறது.

இந்தநிலையில் கடந்த 20 ஆண்டுகளாக இந்த ஆட்டோ ஓட்டுனர்களுக்கு வாகனங்கள் நிறுத்த இடம் இல்லை என்று கூறப்படுகிறது. இதனால் கிடைத்த இடங்களில் ஆட்டோக்களை நிறுத்தி வாகனங்களை பயன்படுத்தி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் மற்றும் நகரசபை நிர்வாகம் அதிருப்தி தெரிவிப்பதால், ஒரே இடத்தில் வாகனங்களை நிறுத்த முடியாமல் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

இந்தநிலையில் தனியாக ஆட்டோ நிறுத்தம் அமைத்து கொடுக்கவேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்து வந்தனர். மேலும் இதுகுறித்து தொகுதி எம்.எல்.ஏ.விடமும் கோரிக்கை வைத்து வந்தனர். ஆனால் தொகுதி எம்.எல்.ஏ. நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இந்தநிலையில் நேற்று ஆட்டோ ஓட்டுனர்கள் சங்கத் தலைவர் ஜெயகாந்த் தலைமையிலானவர்கள், தொகுதி எம்.எல்.ஏ.வை நேரில் சந்தித்து தங்கள் கோரிக்கை மனுவை வழங்கினர். அப்போது அவர்கள் ஆண்டர்சன்பேட்டையில் ஆட்டோ நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இதை கேட்ட எம்.எல்.ஏ. ஆட்டோ நிறுத்தம் அமைக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்துள்ளார். இருப்பினும் எப்போது ஆட்டோ நிறுத்தம் அமைக்கப்படும் என்ற கேள்வி எழுந்துள்ளது.

மேலும் செய்திகள்