< Back
பெங்களூரு
போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது:  இந்தி நடிகர் சித்தாந்த் கபூருக்கு ஜாமீன்
பெங்களூரு

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைது: இந்தி நடிகர் சித்தாந்த் கபூருக்கு ஜாமீன்

தினத்தந்தி
|
14 Jun 2022 9:07 PM IST

போதைப்பொருள் பயன்படுத்தியதாக கைதான இந்தி நடிகர் சித்தாந்த் கபூர் உள்பட 5 பேருக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. ஆனால் விசாரணைக்கு ஆஜராகும்படி போலீசார் நோட்டீசு அனுப்பி உள்ளனர்.

பெங்களூரு:

மது விருந்து நிகழ்ச்சி

பெங்களூரு அல்சூர் போலீஸ் எல்லைக்கு உட்பட்ட டிரினிட்டி சர்க்கிள் ப குதியில் ஒரு நட்சத்திர ஓட்டல் உள்ளது. இந்த நிலையில் அந்த ஓட்டலில் மதுவிருந்து நிகழ்ச்சி நடத்தப்படுவதாகவும், அங்கு போதைப்

பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும் அல்சூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அந்த தகவலின்பேரில் ஓட்டலுக்கு சென்ற போலீசார் அங்கு மது அருந்திவிட்டு நடனமாடி கொண்டு இருந்த 30 பேரை பிடித்து சென்றனர். மேலும் அந்த ஓட்டலில் இருந்து போதை மாத்திரைகள், கஞ்சாவையும் போலீசார் பறிமுதல் செய்து இருந்தனர். பிடிபட்ட 30 பேரின் ரத்த மாதிரி எடுக்கப்பட்டு ஆய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. இதில் 5 பேர் போதைப்பொருட்கள் பயன்படுத்தியது தெரியவந்தது.

ஜாமீனில் விடுவிப்பு

இதனால் 5 பேரையும் போலீசார் கைது செய்து இருந்தனர். இவர்களில் ஒருவர் இந்தி நடிகர் சித்தாந்த் கபூர் ஆவர். மற்றவர்கள்

சித்தாந்த் கபூரின் நண்பர்களான அகில்சோனி, அகில், ஹர்ஷ்வத்சிங், ஹனி என்பது தெரியவந்தது. இந்த நிலையில் கைதான 5 பேருக்கும் போலீஸ் நிலைய ஜாமீன் வழங்கப்பட்டு அவர்கள் விடுவிக்கப்பட்டனர்.

ஆனாலும் நேற்று விசாரணைக்கு ஆஜராகும்படி சித்தாந்த் கபூர் உள்பட 5 பேருக்கும் போலீசார் நோட்டீசு அனுப்பி இருந்தனர். இந்த நிலையில் நேற்று சித்தாந்த் கபூர் அல்சூர் போலீஸ் நிலையத்தில் ஆஜரானார். அவரிடம் போதைப்பொருள் பயன்படுத்தியது குறித்து போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணை முடிந்து அவர் திரும்பி சென்றார்.

போதைப்பொருள் பயன்படுத்தவில்லை

இதுகுறித்து நடிகர் சித்தாந்த் கபூர் கூறுகையில், 'நான் போதைப்பொருட்களை பயன்படுத்தவில்லை, நான் அந்த ஓட்டலில் நடந்த நிகழ்ச்சியில் டி.ஜே.வாக மட்டும் இருந்தேன்' என்றார்.

மேலும் செய்திகள்