< Back
பெங்களூரு
சங்கிலி தொடர் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு
பெங்களூரு

சங்கிலி தொடர் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் சாவு

தினத்தந்தி
|
23 July 2022 8:49 PM IST

பெங்களூருவில் சங்கிலி தொடர் விபத்தில் தனியார் நிறுவன ஊழியர் உயிரிழந்தார்.

பெங்களூரு:

பெங்களூரு பல்லாரி சாலை உள்ள ஜக்கூர் மேம்பால பகுதியில் ஒரு கார் சென்று கொண்டு இருந்தது. அப்போது அந்த வழியாக வேகமாக வந்த ஆம்புலன்ஸ் கட்டுப்பாட்டை இழந்து கார் மற்றும் ஒரு ஆட்டோவின் மீது மோதியது. இந்த விபத்தில் கார், ஆட்டோ முற்றிலும் சேதம் அடைந்தது. மேலும் காரின் இடிபாடுகளில் சிக்கி அந்த காரை ஓட்டி சென்ற தனியார் நிறுவன ஊழியரான சஞ்சீவ் குமார் என்பவர் உயிரிழந்தார்.

ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த இவர் பெங்களூருவில் தங்கி இருந்து தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வந்தார். இதுபோல ஆட்டோ டிரைவரான யராப் என்பவரும் படுகாயம் அடைந்தார். விபத்து குறித்து எலகங்கா போக்குவரத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.

மேலும் செய்திகள்