< Back
பெங்களூரு
மண்டியா மாவட்டத்தில் அனைத்து விளையாட்டு மைதானங்களும் சீரமைக்கப்படும்- மந்திரி நாராயணகவுடா தகவல்
பெங்களூரு

மண்டியா மாவட்டத்தில் அனைத்து விளையாட்டு மைதானங்களும் சீரமைக்கப்படும்- மந்திரி நாராயணகவுடா தகவல்

தினத்தந்தி
|
12 July 2022 11:09 PM IST

மண்டியா மாவட்டத்தில் அனைத்து விளையாட்டு மைதானங்களும் சீரமைக்கப்பட உள்ளதாக மந்திரி நாராயணகவுடா தெரிவித்துள்ளார்.

மண்டியா:

மந்திரி நாராயணகவுடா

மாநில விளையாட்டுத்துறை மற்றும் இளைஞர் நலன் மந்திரி நாராயணகவுடா மண்டியாவில் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

மண்டியா மாவட்டத்தில் உள்ள விளையாட்டு மைதானங்களை சீரமைக்கவேண்டும் என்பதே எனது இலக்கு. இதற்காக மண்டியா நகரத்திற்கு மட்டும் ரூ.10 கோடி, கே.ஆர் பேட்டையில் ரூ.14 கோடி, ஸ்ரீரங்கப்பட்டணாவிற்கு ரூ.50 லட்சம் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்த நிதியை கொண்டு மண்டியா மாவட்டம் கியாத்தனஹள்ளியில் கே.எஸ்.புட்டண்ணய்யா நினைவு விளையாட்டு மைதானம் அமைக்கப்படும். இதற்காக ரூ.1.15 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

விளையாட்டு மைதானங்கள்

இதற்கு அடுத்தப்படியாக மலவள்ளி கனகதாசா விளையாட்டு மைதானம் புனரமைப்பிற்கு ரூ.1 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதேபோல் மண்டியா மாவட்டத்தில் உள்ள அனைத்து விளையாட்டு மைதானங்களும் சீரமைக்கப்படும்.

இவ்வாறு அவர் கூறினார்.

மேலும் செய்திகள்