< Back
பெங்களூரு
மேகதாது திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி
பெங்களூரு

மேகதாது திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி

தினத்தந்தி
|
19 Oct 2023 12:15 AM IST

மேகதாது திட்டத்தை அமல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளதாக துண முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பேட்டி அளித்துள்ளார்.

பெங்களூரு:

துணை முதல்-மந்திரி டி.கே.சிவக்குமார் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நீர்ப்பாசனத்துறையில் பெலகாவி மண்டலத்தில் 651 இடங்கள் காலியாக உள்ளன. இந்த காலிப் பணியிடங்களை நிரப்ப விரைவாக நடவடிக்கை எடுக்கப்படும். கலசா-பண்டூரி திட்டத்தை செயல்படுத்த நாங்கள் தயாராக உள்ளோம். ஆனால் சம்பந்தப்பட்ட மாநிலங்களிடையே உள்ள கருத்து வேறுபாடுகளை மத்திய அரசு களைய வேண்டும்.

மேகதாது திட்டத்தை செயல்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளோம். இதற்காக சுப்ரீம் கோர்ட்டின் படிக்கட்டு ஏறுவோம். அதே போல் கலசா-பண்டூரி திட்டத்திற்காகவும், கோர்ட்டுக்கு செல்வோம்.

கிருஷ்ணா மேலணை திட்டம் தொடர்பாக வருகிற 28-ந் தேதி ஆலோசனை கூட்டத்தை கூட்டியுள்ளேன். இந்த திட்டத்திற்கு தேவையான நிதி ஒதுக்கீடு செய்வது தொடர்பாக முதல்-மந்திரியிடம் ஆலோசிக்கப்படும். சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் பெலகாவியில் நடத்துவது தொடர்பாக மந்திரிசபை கூட்டத்தில் முடிவு செய்யப்படும்.

என்னை கே.டி.சிவக்குமார் என்று பா.ஜனதாவை சேர்ந்த சி.டி.ரவி விமர்சிக்கிறார். அவருக்கு அவரது கட்சியினரே 'லூட்டி' (கொள்ளை) ரவி என்று பெயரிட்டுள்ளனர். அவரது கட்சியினர் என்ன கூறினர் என்பதற்கு என்னிடம் ஆதாரங்கள் உள்ளன.

இவ்வாறு டி.கே.சிவக்குமார் கூறினார்.

மேலும் செய்திகள்