< Back
பெங்களூரு
லாரி மோதி 2 தொழிலாளர்கள் பலி
பெங்களூரு

லாரி மோதி 2 தொழிலாளர்கள் பலி

தினத்தந்தி
|
18 Oct 2023 3:19 AM IST

சிந்தாமணி டவுனில் லாரி மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம-அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

கோலார் தங்கவயல்:

சிந்தாமணி டவுனில் லாரி மோதி தொழிலாளர்கள் 2 பேர் பலியானார்கள். இதனால் ஆத்திரம் அடைந்த டிரைவருக்கு பொதுமக்கள் தர்ம-அடி கொடுத்த சம்பவம் நடந்துள்ளது.

2 பேர் பலி

சிக்பள்ளாப்பூர் மாவட்டம் சிந்தாமணி டவுன் வினோபா நகர் பகுதியைச் சேர்ந்தவர் கிருஷ்ணப்பா(வயது 46). இவரது நண்பர் வெங்கடேஷ்(42). இவர்கள் இருவரும் தொழிலாளர்கள் ஆவார்கள். இவர்கள் இருவரும் சிந்தாமணியில் டவுனில் உள்ள முக்கிய சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது அவர்களுக்கு பின்னால் தக்காளி பாரம் ஏற்றிக்கொண்டு ஒரு லாரி வந்தது.

அந்த லாரி திடீரென்று டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடி சாலையோரம் நடந்து சென்று கொண்டிருந்த கிருஷ்ணப்பா மற்றும் வெங்கடேஷ் ஆகிய 2 பேர் மீது மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்கள்.

சோகம்

இதைப்பார்த்த அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக அவர்கள் லாரியை சுற்றி வளைத்து பிடித்தனர். பின்னர் டிரைவரை பிடித்து தர்ம அடி கொடுத்தனர். பின்னர் இதுபற்றி அவர்கள் சிந்தாமணி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து லாரி டிரைவரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் டிரைவரின் பெயர் மஞ்சுநாத் என்பது தெரியவந்தது.

அதையடுத்து போலீசார் லாரி டிரைவர் மஞ்சுநாத்தை கைது செய்தனர். மேலும் அவர் மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். விபத்தில் பலியான கிருஷ்ணப்பா, வெங்கடேஷ் ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனைக்காக சிந்தாமணி அரசு ஆஸ்பத்திரியில் வைக்கப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்