< Back
பெங்களூரு
டாக்டர் வீட்டிற்குள் புகுந்த வெள்ளை நிற நாகபாம்பு
பெங்களூரு

டாக்டர் வீட்டிற்குள் புகுந்த வெள்ளை நிற நாகபாம்பு

தினத்தந்தி
|
16 July 2022 10:42 PM IST

சிவமொக்கா டவுன் பகுதியில் டாக்டர் வீட்டிற்குள் புகுந்த வெள்ளை நிற பாம்பு பிடிப்பட்டது.

சிவமொக்கா:

சிவமொக்கா டவுன் என்.டி. சாலையில் வசித்து வருபவர் பிரதீப். டாக்டர். இவரது வீட்டில் உள்ள வேலைக்காரர் நேற்று வீட்டின் வெளி பகுதியில் வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு அடுக்கி வைக்கப்பட்டிருந்த விறகுக்குள் வெள்ளை நிற பாம்பு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதையடுத்து அவர் உடனடியாக டாக்டர் பிரதீப்பிற்கு தகவல் கொடுத்தார்.

பின்னர் பிரதீப், இதுகுறித்து பாம்பு பிடி வீரரான கிரண் என்பவருக்கு தகவல் அளித்தார். அந்த தகவலின்பேரில் பிரதீப் வீட்டிற்கு, பாம்பு பிடி வீரர் கிரண் விரைந்து வந்தார். அங்கு வந்த கிரண், அங்கிருந்த விறகுகளை அப்புறப்படுத்தி அதில் இருந்த வெள்ளை நிறபாம்பை லாவகமாக பிடித்தார். அந்த பாம்பை பிடித்த கிரண், இந்த பாம்பானது, வெள்ளை நிற நாகபாம்பு என்றும், அந்த வகை நாகப்பாம்புகள் நீண்ட நாட்கள் உயிர்வாழாது எனவும் கூறினார். இதையடுத்து பிடிபட்ட பாம்பை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். அந்த பாம்பை வனத்துறையினர் எடுத்து சென்று அடர்ந்த வனப்பகுதியில் விட்டனர்.

மேலும் செய்திகள்