< Back
பெங்களூரு
மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் சாவு-போலீஸ் விசாரணை
பெங்களூரு

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் வாலிபர் சாவு-போலீஸ் விசாரணை

தினத்தந்தி
|
3 Sept 2022 10:46 PM IST

மோட்டார் சைக்கிள் மீது சரக்கு வாகனம் மோதி விபத்தில் வாலிபர் உயிரிழந்தார்.

மண்டியா:

மண்டியா மாவட்டம் ஹொன்னநாயக்கனஹள்ளி பகுதியை சேர்ந்தவர் குமார் (வயது 28). இவர் கே.எம் தொட்டியில் இருந்து ஹொன்னநாயக்கனஹள்ளி கிராமத்திற்கு மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அதே சாலையில் எதிரே ஹலகூருவில் இருந்து ஹொன்னநாயக்கனஹள்ளியை நோக்கி வந்த சரக்கு வாகனம் ஒன்று மோட்டார் சைக்கிள் மீது மோதியது. இதில் குமார் மோட்டார் சைக்கிளில் இருந்து தூக்கி வீசப்பட்டார். மேலும் தலை பகுதியில் பலத்த காயமடைந்த குமார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.

இதுகுறித்து அருகில் இருந்தவர்கள் கே.எம்.தொட்டி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் போில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார், குமாரின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்