< Back
பெங்களூரு
சாலையோரம் நின்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்;  10 அடி உயரம் தூக்கி வீசப்பட்டவர் படுகாயம்
பெங்களூரு

சாலையோரம் நின்ற மோட்டார் சைக்கிள் மீது மோதிய கார்; 10 அடி உயரம் தூக்கி வீசப்பட்டவர் படுகாயம்

தினத்தந்தி
|
17 Oct 2023 12:15 AM IST

சாலையோரம் நின்ற மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் 10 அடி உயரம் தூக்கி வீசப்பட்டவர் படுகாயம் அடைந்தார்.

ஆனேக்கல்:

பெங்களூரு புறநகர் மாவட்டம் ஆனேக்கல் அருகே குட்டனஹள்ளி ஏரி அருகே சாலையோரம் 2 பேர் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கார், டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்து தாறுமாறாக ஓடியது. திடீரென்று அந்த கார் சாலையோரம் மோட்டார் சைக்கிளில் நின்று கொண்டிருந்த 2 பேர் மீது மோதியது. கார் மோதிய வேகத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்த ஒருவர் பல அடி தூரம் தூக்கி வீசப்பட்டார். இதில் அவர் பலத்த காயம் அடைந்தார். மற்றொருவர் லேசான காயத்துடன் உயிர் தப்பினார். காயம் அடைந்த நபரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு உயிருக்கு ஆபத்தான நிலையில் அந்த நபர் சிகிச்சை பெற்று வருகிறார். சாலையோரம் நிற்கும் மோட்டார் சைக்கிள் மீது தாறுமாறாக ஓடும் கார் மோதுவதையும், ஒரு நபர் பல அடி தூரம் தூக்கி வீசுவதையும் பின்னால் காரில் வந்த ஒருவர் செல்போனில் வீடியோ எடுத்தார். நெஞ்சை பதற வைக்கும் அந்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து ஆனேக்கல் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் டிரைவரை கைது செய்தனர்.

மேலும் செய்திகள்